விளையாட்டு
ரிஷப் பண்ட்

குறைந்த டெஸ்டில் 100 விக்கெட் - டோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்

Published On 2021-12-28 22:16 GMT   |   Update On 2021-12-28 22:16 GMT
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.டோனி இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
கேப் டவுன்:

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்  மூலம் அவர் பேட்ஸ்மேனை 101 முறை  (93 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவுட் செய்துள்ளார். அவர் இதனை 26 டெஸ்ட் போட்டிகளில் செய்துள்ளார்.

முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்.எஸ் டோனி 36 போட்டிகளில் இச்சாதனையை படைத்துள்ளார்.

Tags:    

Similar News