விளையாட்டு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 2 உதவியாளருக்கு கொரோனா

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 2 உதவியாளருக்கு கொரோனா

Published On 2021-12-27 12:33 IST   |   Update On 2021-12-27 12:33:00 IST
2-வது நாள் ஆட்டம் முடிந்ததும் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் யாருக்காவது தொற்று உறுதியானால் மாற்று வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மெல்போர்னில் நடந்து வரும் ஆ‌ஷஸ் தொடரின்3-வது டெஸ்டின் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் உதவியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 2 குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பு உள்ளது.

இதையடுத்து வீரர்கள் அனைவரும் ஓட்டலில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. அதே போல் மற்ற அணி உதவியாளர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. 

இதையடுத்து இன்றைய 2-வது நாள் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. இன்று போட்டி முடிந்ததும் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் யாருக்காவது தொற்று உறுதியானால் மாற்று வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Similar News