விளையாட்டு
விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாட்டை வீழ்த்தி இமாசல பிரதேசம் முதல் முறையாக சாம்பியன்
குறைந்த வெளிச்சத்தின் காரணமாக விஜேடி முறையின் அடிப்படையில் இமாசல பிரதேச அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் 2021-2022 ஆண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தமிழ்நாடு, இமாசல பிரதேசம் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 116 ரன்கள் எடுத்தார்.
இதை தொடர்ந்து 50 ஓவர்களில் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இமாசல பிரதேச அணி களமிறங்கியது. அந்த அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குறைந்த வெளிச்சம் காரணமாக விஜேடி முறையின் அடிப்படையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் முதல்முறையாக விஜய் ஹசாரே கோப்பையை இமாசல பிரதேசம் வென்றுள்ளது.