விளையாட்டு
உணவு இடைவேளை வரை நங்கூரமாக நின்ற மயங்க், கே.எல். ராகுல்
செஞ்சுரியனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, விராட் கோலி, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தென்ஆப்பிரிக்காவின் ரபடா, லுங்கி நிகிடி, ஜான்சென், முல்லர் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஜோடியை தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் முதல்நாள் ஆட்டம் உணவு இடைவேளை வரை இந்தியா 28 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 84 பந்தில் 46 ரன்களும், கே.எல். ராகுல் 84 பந்தில் 29 ரன்களும் அடித்துள்ளனர்.