விளையாட்டு
விராட் கோலி, ஹர்பஜன் சிங், டிராவிட்

711 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரண விஷயம் அல்ல: ஹர்பஜன் சிங்கிற்கு கோலி, டிராவிட் பாராட்டு

Published On 2021-12-25 05:22 GMT   |   Update On 2021-12-25 05:22 GMT
2001-ம் ஆண்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்பஜன், தன்னை நிரூபித்து அணிக்கு திரும்பியதுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
செஞ்சூரியன்:

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு விடைத்தரும் வகையில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தென் ஆப்ரிக்காவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வீடியோவில் கோலி, டிராவிட் பேசியிருப்பதாவது:-

ஹர்பஜன் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து போராடி முன்னேறி வந்திருக்கிறார்.  2001-ம் ஆண்டு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது சற்றும் தளராமல் தன்னை நிரூபித்து அணிக்கு திரும்பினார். அதே போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங் எடுத்துள்ள 711 விக்கெட்டுகள் சாதாரண விஷயம் அல்ல.

இவ்வாறு அந்த வீடியோவில் கோலி, டிராவிட் இருவரும் பாராட்டியுள்ளனர்.
Tags:    

Similar News