விளையாட்டு
தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி பெறுமா? பெங்களூருடன் இன்று மோதல்

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி பெறுமா? பெங்களூருடன் இன்று மோதல்

Published On 2021-12-24 11:52 IST   |   Update On 2021-12-24 11:52:00 IST
தமிழ் தலைவாஸ் அணி மோதிய தொடக்க ஆட்டம் சமனில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது.

இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி மோதிய தொடக்க ஆட்டம் (தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக) சமனில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணி தனது முதல் ஆட்டத்தில் யு மும்பை அணியிடம் தோற்றது.

இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை- தபாங் டெல்லி அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

Similar News