விளையாட்டு
விக்கெட் வீழ்த்தியவரை பாராட்டும் சக வீரர்கள்

ஜூனியர் ஆசிய கோப்பை - ஹர்நூர் சிங் சதத்தால் இந்தியா அபார வெற்றி

Published On 2021-12-23 22:41 GMT   |   Update On 2021-12-23 22:42 GMT
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போட்டி நாளை நடைபெற உள்ளது.
துபாய்:

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா நகரங்களில் நேற்று தொடங்கியது.

இதில் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தை நேற்று எதிர்கொண்டது. டெல்லியை சேர்ந்த பேட்ஸ்மேன் யாஷ் துல் தலைமையில் களம் இறங்கியது. 

டாஸ் வென்று முதலில் பேட் செய்த  இந்தியா 5 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்நூர் சிங் 120 ரன்கள் எடுத்தார். கேப்டன் யாஷ் துல் அரை சதமடித்து 63 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 128 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Tags:    

Similar News