விளையாட்டு
பி.வி.சிந்து

பி.டபுள்யு.எப். தடகள ஆணைய உறுப்பினராக பி.வி.சிந்து நியமனம்

Published On 2021-12-20 13:08 GMT   |   Update On 2021-12-20 13:08 GMT
புதிய ஆணையம் விரைவில் கூடி இந்த ஆறு உறுப்பினர்களில் ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை முடிவு செய்யும்.
புதுடெல்லி: 

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (பி.டபுள்யு.எப்.) தடகள ஆணைய உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் உலக சாம்பியனான சிந்து, 2025 வரை உறுப்பினர் பதவியில் நீடிப்பார். 

சிந்து தவிர, அமெரிக்காவின் ஐரிஸ் வாங், நெதர்லாந்தின் ராபின் டாபலிங், இந்தோனேசியாவின் கிரேசியா போலி, கொரியாவின் கிம் சோயியாங், சீனாவின் செங் சி வெய் ஆகியோரும் தடகள ஆணைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

புதிய ஆணையம் விரைவில் கூடி இந்த ஆறு உறுப்பினர்களில் ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை முடிவு செய்யும். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய தலைவர், 2025 இல் அடுத்த தேர்தல்கள் வரை கவுன்சிலின் உறுப்பினராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News