விளையாட்டு
விராட் கோலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி விலகல்?

Published On 2021-12-14 14:53 IST   |   Update On 2021-12-14 14:53:00 IST
ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விராட் கோலி, தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு அவர் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் தற்போது டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக உள்ளார். ரோகித் சர்மா ‘ஒயிட் பால்’ போட்டிகளுக்கு (ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக பணியாற்றுகிறார்.

இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலகுகிறார். அவரது மகள் வமிகாவின் முதலாமாண்டு பிறந்த நாளையொட்டி அவர் ஒருநாள் போட்டியில் ஆடமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 11-ம் தேதி அவரது குழந்தைக்கு முதலாமாண்டு பிறந்தநாளாகும். ஒருநாள் தொடர் 19-ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் விராட் கோலி அதிருப்தியுடன் இருப்பதாக  தகவல் வெளியாகி இருந்தது.  இந்த நிலையில்தான் அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார்.

Similar News