விளையாட்டு
அஸ்வின்

துணை கேப்டன் பதவி அஸ்வினுக்கு கிடைக்குமா?

Published On 2021-12-14 13:12 IST   |   Update On 2021-12-14 13:12:00 IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், புதிய துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஒரே சுழற்பந்து வீரர் அவர்தான். அதிக அனுபவம் வாய்ந்தவர். தென் ஆப்பிரிக்காவுக்கு பலமுறை சென்று வந்தவர். சீனியர் வீரர் என்ற அடிப்படையில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

அதே நேரத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தால் லோகேஷ் ராகுல் அல்லது ரி‌ஷாப் பண்ட் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவார்.

Similar News