விளையாட்டு
இந்திய அணி (கோப்புப்படம்)

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: இந்திய அணி வீரர்கள் 3 நாட்கள் தனிமை

Published On 2021-12-14 12:56 IST   |   Update On 2021-12-14 12:56:00 IST
இந்திய அணி வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி இன்னும் அணியுடன் இணையவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஜோகன்ஸ் பர்க்கிலும் (ஜனவரி 3-7), கடைசி டெஸ்ட் கேப் டவுனிலும் (ஜனவரி 11-15) நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் ஜனவரி 19, 21 மற்றும் 23-ந் தேதிகளில் நடக்கிறது.

முன்னதாக இந்த டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்க இருந்தது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக டெஸ்ட் தொடர் 9 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் 3 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பை வந்த இந்திய வீரர்கள் விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளை வரை வீரர்கள் தனிமையில் இருப்பார்கள். வருகிற 16-ந் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறது.

ஷ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷாப் பண்ட், ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் தனிமையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளனர். ஆனால் கேப்டன் விராட் கோலி ஓட்டலுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.

Similar News