விளையாட்டு
ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸ்

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மூவருக்கு கொரோனா

Published On 2021-12-12 07:29 IST   |   Update On 2021-12-12 07:29:00 IST
பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. டி20 கிரிக்கெட் தொடர் நாளை கராச்சியில் தொடங்குகிறது.

இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் சென்றடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஸ்டாஃப்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கும் ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், கைல் மேயர்ஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். அறிகுறி ஏதும் இல்லை. ஓட்டல் அறையில் அறையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டி20 தொடரில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Similar News