செய்திகள்
ரோகித் சர்மா

டக்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பியும், ஜொலிக்க முடியாமல் ரோகித் சர்மா ஏமாற்றம்

Published On 2021-10-31 20:16 IST   |   Update On 2021-10-31 20:16:00 IST
3-வது ஓவரின் கடைசி பந்தில் லெக்சைடு அடித்த பந்தை ஆடம் மில்னே கேட்ச் பிடிக்க தவறியதால், ரோகித் சர்மா முதல் பந்திலேயே அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3-வது ஓவரை டிரென்ட் பவுல்ட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிஷன் ஆட்டம் இழந்தார். அவர் 8 பந்தில் 4 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். டிரென்ட் பவுல்ட் வீசிய கடைசி பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்டார். இந்த பந்தை டிரென்ட் பவுல்ட் ஷார்ட் பிட்ச் பவுன்சராக வீசினார். ரோகித் சர்மா லெக் சைடு ஹூக் ஷாட்டாக விளாசினார். ஆனால் பந்து பவுண்டரி லைனுக்கு வெளியில் செல்லாமல் தயாராக இருந்த ஆடம் மில்னே கைக்கு சென்றது. எளிதாக பிடிக்க வேண்டிய கேட்ச்-ஐ மில்னே தவறவிட்டார். இதனால் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கினால், அதன்பின் ருத்ர தாண்டவம் ஆடுவார் என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று 14 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

Similar News