செய்திகள்
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
கேப்டன் முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடி ஆப்கானிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
துபாய்:
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, ஆரம்பத்தில் தடுமாறியது. பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முன்வரிசை வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் ஆட்டமிழக்காமல் தலா 35 ரன்கள் சேர்க்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.