செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

கடைசி ஓவரில் ரஸல் மாயாஜால பந்துவீச்சு- வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி

Published On 2021-10-29 19:51 IST   |   Update On 2021-10-29 19:51:00 IST
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை அற்புதமாக வீசிய ரஸல் 9 ரன்களில் கட்டுப்படுத்தினார்.
ஷார்ஜா:

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகள் விளையாடின. 

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார். ராஸ்டன் சேஸ் 39 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கறமிறங்கிய வங்காளதேசம் அணியின் துவக்க வீரர்கள் முகமது நைம் 17 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய லிட்டன் தாஸ் 44 ரன்கள் சேர்த்தார் சவுமா சர்க்கார் 17 ரன், முஷ்பிகுர் ரகிம் 8 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். 

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை அற்புதமாக வீசிய ரஸல் 9 ரன்களில் கட்டுப்படுத்தினார். இதனால், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களே எடுத்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 

மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 31 ரன்களுடனும், ஆபிப் உசைன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக நிகோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார்.

Similar News