செய்திகள்
கேன் வில்லியம்சன் அவுட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 142 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Published On 2021-10-06 21:26 IST   |   Update On 2021-10-06 21:26:00 IST
ஜேசன் ராய், கேன் வில்லியம்சன் ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஆர்.சி.பி.க்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 52-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜேசன் ராய், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷர்மா 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஜேசன் ராய் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 11.3 ஓவரில் 84 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கேன் வில்லியம்சன் 29 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



அதன்பின் ஜேசன் ராய் 38 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க சன்ரைசர்ஸ் அணி ஆட்டம் காண ஆரம்பித்தது. மிடில் ஆர்டர்களில் பிரியம் கார்க் 15 ரன்னும், அப்துல் சமாத் 1 ரன்னும், விருத்திமான் சாகா 10 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே அடித்துள்ளது.

ஆர்.சி.பி. அணியில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டும், டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெடும், கார்டன் மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Similar News