செய்திகள்
நீஷம்

மும்பை பந்து வீச்சாளர்கள் அசத்தல்: 91 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்

Published On 2021-10-05 21:22 IST   |   Update On 2021-10-05 22:35:00 IST
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் நீஷம், கவுல்டர் நைல் அபாரமாக பந்து வீச 91 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 51-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் சிறப்பான ஆடினர். என்றாலும் 9 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். எவின் லீவிஸ் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்துவெளியேறினார். அப்போது ராஜஸ்தான் ஸ்கோர் 5.3 ஓவரில் 21 ரன்களா இருந்தது.

அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் (3), ஷிவம் டுபே (4) ஆகியோரை நீஷம் வெளியேற்ற, க்ளென் பிலிப்ஸை (4) கவுல்டர்-நைல் வெளியேற்றினார். இதனால் 50 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியது.

மில்லர் 15 ரன்களும், ராகுல் டெவாட்டியா 12 ரன்களும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 75 ரன்னைக் கடந்தது. மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, கவுல்டர்-நைல், நீஷம் ஆகியோர் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.



இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களே அடிக்க முடிந்தது.

நீஷம் 4 ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், பும்புரா 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், கவுல்டர்-நைல் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News