செய்திகள்
வங்காளதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக தென்ஆப்பிரிக்காவின் அஷ்வெல் பிரின்ஸ் நியமனம்
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் அஷ்வெல் பிரின்ஸ், வங்காளதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஷ்வெல் பிரின்ஸ் (வயது 44) தென்ஆப்பிரிக்கா அணிக்காக 66 டெஸ்ட், 52 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 41.64 சராசரியும், ஒருநாள் போட்டியில் 35.10 சராசரியும் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 11 சதங்கள் அடித்துள்ளார்.
இவரை வங்காளதேச கிரிக்கெட் போர்டு பேட்டிங் ஆலோசகராக நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை வரை ஆலோசகராக செயல்படுவார்.
கடந்த மாதம் வங்காளதேச அணி ஜிம்பாப்வே சென்று விளையாடும்போது வங்காளதேச அணிக்கு ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தென்ஆப்பிரிக்காவின் உள்ளூர் அணியான மேற்கு மாகாண அணியின் பயிற்சியாளராக உள்ளார். வங்காளதேச அணிக்காக அந்த பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.