செய்திகள்
அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜோரூட்-மார்கன் ஜோடி

சாம் கர்ரன், மார்கன் அபாரம் - இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

Published On 2021-07-01 19:50 GMT   |   Update On 2021-07-01 19:50 GMT
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. தனஞ்செய டி சில்வா சிறப்பாக ஆடி 91 ரன்னில் அவுட்டானார். ஷனகா 47 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இங்கிலாந்து அணி சார்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டும், வில்லே 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.



இதையடுத்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 29 ரன்னில் வெளியேறினார். ஜேசன் ராய் அரை சதமடித்து 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ஜோ ரூட்டுடன், கேப்டன் மார்கன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

இறுதியில், இங்கிலாந்து அணி 43 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் 68 ரன்னுடனும், மார்கன் 75 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது சாம் கர்ரனுக்கு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News