செய்திகள்
அபிஷேக் வர்மா

உலக கோப்பை வில்வித்தை போட்டி - அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்

Published On 2021-06-27 00:49 IST   |   Update On 2021-06-27 00:49:00 IST
போலந்தில் கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்–3’ போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றிருந்தார்.
பாரிஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்–3’ போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ரஷ்யாவின் ஆன்டன் புலேவ் மோதினர். அபாரமாக ஆடிய அபிஷேக் 146–138 என வெற்றி பெற்றார். 

தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபிஷேக் வர்மா அமெரிக்காவின் கிரிஸ் ஸ்ஷாப் மோதினர்.


விறுவிறுப்பாக நடந்த இப்போட்டி  148–148 என சமநிலை அடைந்தது. அதன்பின், ‘டை பிரேக்கர்’ முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் அபிஷேக் 10–9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

உலக கோப்பை தனிநபர் பிரிவில் அபிஷேக் வர்மா கைப்பற்றிய 2-வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News