செய்திகள்
பி.ஆர்.ஸ்ரீஜேஷ்

ஸ்ரீஜேஷ், தீபிகாவுக்கு கேல் ரத்னா விருது- பரிந்துரை செய்தது ஹாக்கி இந்தியா

Published On 2021-06-26 16:33 IST   |   Update On 2021-06-26 16:33:00 IST
ஹர்மன்பிரீத் சிங், வந்தனா கட்டாரியா மற்றும் நவ்ஜோத் கவுர் ஆகியோரின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில், தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன.



அவ்வகையில், இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் 
பி.ஆர்.ஸ்ரீஜேஷ்
, மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை தீபிகா ஆகியோரின் பெயர்களை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஹாக்கி இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இதேபோல், ஹர்மன்பிரீத் சிங், வந்தனா கட்டாரியா மற்றும் நவ்ஜோத் கவுர் ஆகியோரின் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் வீரர்கள் டாக்டர் ஆர்.பி.சிங், எம்.சிஎச்.சங்காய் இபெம்ஹல் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான  தயான் சந்ந் விருதுக்கும், பயிற்சியாளர்கள் பி.ஜே.கரியப்பா, சி.ஆர்.குமார் ஆகியோர் துரோணாச்சாரியா விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Similar News