செய்திகள்
மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மரணம்
சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நேற்று முன்தினம் நடந்த இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவரான ஜாசன் துபாஸ்குயர் விபத்தில் சிக்கினார்.
சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நேற்று முன்தினம் நடந்த இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவரான ஜாசன் துபாஸ்குயர் (சுவிட்சர்லாந்து) விபத்தில் சிக்கினார். இவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு பல அடி தூரம் பல்டி அடித்து விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த 19 வயதான ஜாசன் துபாஸ்குயர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது சாவு, மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.