செய்திகள்
கேஎல் ராகுல்

இங்கிலாந்து செல்வதற்கு சிறந்த முறையில் தயாராகி வருகிறார் கே.எல். ராகுல்

Published On 2021-05-24 15:59 IST   |   Update On 2021-05-24 15:59:00 IST
ஐபிஎல் போட்டியின்போது வயிற்று வலி காரணமாக குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கேஎல் ராகுல், அதில் இருந்து குணமடைந்துள்ளார்.
இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் கேஎல் ராகுல். டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்த கேஎல் ராகுல் மோசமாக விளையாடிதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். என்றாலும் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரின்போது வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஜூன் 2-ந்தேதி இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. அதற்குள் உடற்தகுதி பெற்றுவிட்டால் அணியுடன் இங்கிலாந்து செல்வார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.



இந்த நிலையில் காயம் குணமாகி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் நிச்சயமாக இங்கிலாந்து செல்வார் என்று ராகுலுக்கு நெருக்கமானவர் மூலம் செய்தி கசிந்துள்ளது.

இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒன்றரை மாத காலம் இருக்கிறது. இதற்கு முன் காயம் அடைந்த சகா ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். அங்கு அணி வீரர்களுடன் இணைந்து வீரர்கள் குணமடைவதற்கான பயிற்சியை மேற்கொண்டார் எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

Similar News