செய்திகள்
ஷுப்மான் கில்

இங்கிலாந்து தொடரில் இந்த ஒரு விசயத்தை சரியாக மதிப்பிட வேண்டும்: ஷுப்மான் கில் சொல்கிறார்

Published On 2021-05-24 10:10 GMT   |   Update On 2021-05-24 10:10 GMT
ஆஸ்திரேலியா தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்ற இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் முக்கிய காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது.
இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மெல்போர்ன் மைதானத்தில் அறிமுகமான ஷுப்மான் கில் 259 ரன்கள் குவித்தார். பிரிஸ்பேன் ஆடுகளத்தில் 4-வது இன்னிங்சில் 91 ரன்கள் விளாசி இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் என ஆறு போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த ஆறு போட்டிக்கான இந்திய அணியில் ஷுப்மான் கில் இடம் பிடித்துள்ளார். அவர் இங்கிலாந்து மண்ணில் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளார். ஆனால் இங்கிலாந்து சூழ்நிலை (condistions) பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.

இந்த நிலையில் இங்கிலாந்து ஆடுகளத்தில் ஒரு தொடக்க பேட்ஸ்மேன் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து ஷுப்மான் தெரிவித்துள்ளார்.

ஷுப்மான கில் இங்கிலாந்தில் விளையாடுவது குறித்து கூறுகையில் ‘‘ஒரு தொடக்க வீரராக, இங்கிலாந்தில் மட்டுமல்ல எங்கு விளையாடினாலும், ஒருநாளில் விளையாடப்படும் மூன்று செசன்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு செசன்களிலும் விளையாடுவது முக்கியமானது. இங்கிலாந்தில் பார்த்தீர்கள் என்றால், எப்போதெல்லாம் மேகமூட்டமாக இருக்குமோ, அப்போதெல்லாம் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். சூரியன் வெளியே வந்து வெயில் அடிக்கும்போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். தொடக்க வீரர் இந்த சூழ்நிலையை மதிப்பிடுவது அவசியமானது.



எங்களுடைய ஆட்டம் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக இருந்தது. கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சொந்த மண்ணில் அபாரம். இதைவிட நாங்கள் நாங்கள் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சிறப்பாக தயாராக முடியாது என்று நான் நினைக்கிறென்’’ என்றார்.
Tags:    

Similar News