செய்திகள்
திசாரா பெரேரா

ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார் திசாரா பெரேரா

Published On 2021-03-29 23:09 IST   |   Update On 2021-03-29 23:09:00 IST
இலங்கை அணியின் இடது கை பேட்ஸ்மேன் திசாரா பெரேரா, ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இலங்கை ஆர்மி- ப்ளூம்பீல்டு அணிகளுக்கு இடையில் குரூப் போட்டி நடைபெற்றது.

20 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஐந்தாவது பேட்ஸ்மேனாக இலங்கை ஆர்மி அணியின் கேப்டன் திசாரா பேரேரா களம் இறங்கினார். பகுதி நேர பந்து வீச்சாளரான தில்ஹான் கூரே பந்து வீச பெரேரா ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார்.

இதன் மூலம் ஆறு பந்தில் ஆறு சிக்சர்கள் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 9-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அத்துடன் 13 பந்தில் 52 ரன்கள் விளாசினார். இலங்கை வீரர் கவுசல்யா வீரரத்னே 2005-ல் 12 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.



கார்பீல்டு சோபர்ஸ், ரவி சாஸ்திரி, கிப்ஸ், யுவராஜ் சிங், ரோஸ் ஒயிட்லி, ஹஸ்ரத்துல்லா ஜஜாய், லியோ கார்ட்ர், பொல்லார்டு ஆகியோர் ஆறு பந்தில் ஆறு சிக்சர்கள் விளாசியுள்ளனர்.

Similar News