செய்திகள்
நவோமி ஒசாகா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஒசாகா

Published On 2021-02-18 06:46 GMT   |   Update On 2021-02-18 06:46 GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நவோமி ஒசாகா முன்னேறினார்.

மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்)- 10-வது நிலையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா).

இதில் ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 2019-ம் ஆண்டு சாம்பியன் ஆன அவர் 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். செரீனா 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தார்.

2-வது அரை இறுதி ஆட்டத்தில் 22-வது வரிசையில் உள்ள ஜெனீபர் பிராடி (அமெரிக்கா)- 25-ம் நிலை வீராங்கனையான கரோலினா முச்கோவா மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் இறுதி போட்டியில் ஒசாகாவுடன் மோதுவார்.

ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் ஜோகோவிச் (செர்பியா), கராட்சேவ் (ரஷியா), மெட்வதேவ் (ரஷியா)- சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள்.

Tags:    

Similar News