செய்திகள்
முகமது ஷமி, ஜடேஜா

கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: ஜடேஜா, முகமது ஷமி இல்லை

Published On 2021-02-17 16:12 IST   |   Update On 2021-02-17 16:12:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இடமில்லை.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

3-வது மற்றும் 4-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொதேரா மைதானத்தில் நடக்கிறது. 3-வது டெஸ்ட் 24-ந்தேதி தொடங்குகிறது. இது பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா தொடரின்போது காயம் அடைந்த ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. உமேஷ் யாதவ் உடற்தகுதி பெற்றால் அணியுடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூர் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட்  கோலி, 2. ரோகித் சர்மா, 3. மயங்க் அகர்வால், 4. ஷுப்மான் கில், 5. புஜாரா, 6. ரஹானே, 7. கேஎல் ராகுல், 8. ஹர்திக் பாண்ட்யா, 9. ரிஷப்  பண்ட், 10. சாஹா, 11. அஷ்வின், 12. குல்தீப் யாதவ், 13. அக்சார் பட்டேல், 14. வாஷிங்டன் சுந்தர், 15. இஷாந்த் சர்மா, 16. பும்ரா, 17 முகமது சிராஜ்.

அபிமன்யு ஈஸ்வரன்,  ஷாபாஸ் நதீம், பிரியங்க் பன்சால் ஆகியோர் விஜய் ஹசரே டிராபி தொடருக்கான விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News