செய்திகள்
ஆர் ஸ்ரீதர், ரவி சாஸ்திரி

தொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா

Published On 2021-01-22 15:06 GMT   |   Update On 2021-01-22 15:06 GMT
குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா கூறியதும், தொடரை ரத்து செய்வோம் என ரவி சாஸ்திரி மிரட்டியதால் யு-டர்ன் ஆனது என பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

அதன்பின் சிட்னி நகருக்கு செல்லும்போது ஆஸ்திரேலியா இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. கோரன்டைன் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கியது. இதனால் இந்திய அணி பிரிஸ்பேன் செல்ல தயக்கம் காட்டியது. இறுதியில் வெற்றி பெற்று சாதனைப்படைத்தது.

தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா நெருக்கடி கொடுத்தது. குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதி தரவில்லை. அதன்பின் ரவி சாஸ்திரி மிரட்டல் விடுத்ததால் ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்தது என இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

ஆர் ஸ்ரீதர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் யூ-டியூப் சேனனில் பேசினார். அப்போது நடந்த உரையாடல்,

அஸ்வின்: 2021 புதுவருடம் தொடங்குவதற்கு முன் மெல்போர்னில் ஏராளமான டிராமா நடைபெற்றது. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எங்களை அழைக்கும்போது, நீங்கள் ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்காக சுமார் மூன்றரை மாதங்கள் பயோ-பப்பிள் பாதுகாப்பில் இருந்துள்ளீர்கள். அதனால் ஆஸ்திரேலியாவில் 14 கோரன்டைனுக்குப் பிறகு ஷாஃப்ட் பப்பிள் இருந்தால் போதுமானது என்று சொன்னார்கள்.

நீங்கள் காபி குடிக்க செல்லலாம். படங்கள் பார்க்கலாம். வெளியில் சென்று சந்தோசமாக நேரத்தை செலவிடலாம் என்றார்கள். ஆனால் தொடர் 1-1 என ஆனதும், எங்களை அறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றார்கள். எப்போதும் அறைக்குள்ளேயே எப்படி இருக்க முடியும். அது சவாலான நேரமாக இருந்தது.

ஆர்.ஸ்ரீதர்: எல்லாவற்றிற்கும் முன், நாங்கள் துபாயில் கோரன்டைனில் இருக்கும்போது, அவர்கள் திடீரென குடும்பங்களுக்கு அனுமதி கிடையாது என்றார்கள். ஆஸ்திரேலியா தொடர் கூட தொடங்கவில்லை. அதற்கு முன் ஸ்லெட்ஜிங் தொடங்கிவிட்டது. நாங்கள் இரவு முழுவதும் ஏராளமான போன் செய்தோம். ஆனால், அவர்கள் குடும்பங்களுக்கு அனுமதி கிடையாது என்றார்கள்.

அஸ்வின்: இதை நான் என் மனைவியிடம் கூறினேன், அவர் சரி, நான் வேறு வேறு கணவரை தேடுகிறேன் என்றார்.  நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆறு மாதங்கள் ஆகிறது. என்னுடைய குடும்பம் துபாய் வந்துவிட்டது. அதன்பின் அவர்கள் இப்படி கூறினார்கள்.

ஆர்.ஸ்ரீதர்: அங்கு ஆறு வீரர்களின் குடும்பங்கள் இருந்தது. அதை அவர்களுக்கு எப்படி தெரிவிக்க முடியும்?. அப்புறம் ரவி சாஸ்திரி வந்தார். அவர் ஜும் கால் ஏற்பாடு செய்தார். அவர்கள் எங்களுடைய வீரர்கள் குடும்பத்தை அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடமாட்டோம். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ? அதை செய்யுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

அதன்பின் ஒரு விஷயத்தை கூறினார். என்னைத் தவிர ஆஸ்திரேலியாவை பற்றி யாருக்கும் தெரியாது, அங்கு நான் 40 ஆண்டுகளாக சென்றிருக்கிறேன். அவர்களுடன் எப்படி பேச வேண்டும், எப்படி பேரம் பேச வெண்டும் என்பது எனக்குத் தெரியும் என்றார். பிசிசிஐ அதை ஏற்றுக் கொண்டது. வார இறுதியில் ஒரேநாள் இரவில் ஆஸ்திரேலியா அரசு அனுமதி அளித்தது.

அஸ்வின்: இதற்கு முன் இதுபோன்று நடந்தது கிடையாது. சிட்னியில் நாங்களும், ஆஸ்திரேலியா வீரர்களும் ஒரே பப்பிளில் இருந்தோம். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எங்களுக்கு அனுமதி இல்லை.

ஆர்.ஸ்ரீதர்: இது கொஞ்சம் அவமானகரமானது.
Tags:    

Similar News