செய்திகள்
முகமது ஷமி

நான் காயம் அடைந்தபோது கண்ணீர் விட்டு அழுதேன்: ஏனென்றால்... என நினைவு கூர்ந்த முகமது ஷமி

Published On 2021-01-20 11:50 GMT   |   Update On 2021-01-20 17:33 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்த முகமது ஷமி, கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தயா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் கோட்டை என கூறப்படும் பிரிஸ்பேன் காபா மைதானத்திலேயே இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

முதல் போட்டியில் பேட்டிங் செய்தபோது முகமது ஷமி காயம் அடைந்தார். இதனால் அவர் மற்ற மூன்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் காயம் ஏற்பட்டபோது அவரது மனநிலை எப்படி இருந்தது என்பதை முகமது ஷமி நினைவு கூர்ந்துள்ளார்.

இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘இந்த வெற்றி மிகப்பெரிய சாதனை. இந்திய அணியில் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்தனர். ரிசர்வ் வீரர்களை வைத்துக்கொண்டு அணியை ரஹானே வழிநடத்தியது பாராட்டுக்குரியதாகும்.


அறிமுகம் ஆன வீரர்கள் அவர்களுடைய ஆளுமையை வெளிக்காட்டினர்கள். மிக முக்கியமானது 2018-க்குப் பிறகு தற்போது தொடர்ந்து தொடரை கைப்பற்றியது. இந்த வரலாற்றுச் சாதனையுடன் ஒப்பிட ஏதுமில்லை. இந்தத் தொடரில் ஒரு அணியை நாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். பந்து வீச்சு அல்லது பேட்டிங் எதுவாக இருந்தாலும் சிறப்பாக தங்களை பணியை செய்தார்கள். இந்த வெற்றி, உலகின் எந்தவொரு இடத்திலும் அவர்களது இடத்தில் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்பது நிரூபனம் ஆகியுள்ளது.

நான் காயம் அடையும்போது கண்ணீர் விட்டு அழுதேன். ஏனென்றல், நாங்கள் ஏராளமான திட்டங்கள் தீட்டியிருந்தோம். ஆனால் அணியில் இருந்து இடையிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் நிர்வாகத்ததிற்கு, சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு, அனைத்து வீரர்களுக்கும் இந்த வெற்றியை பெற்றதற்கான பெருமையை வழங்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News