செய்திகள்
அஸ்வினை பாராட்டும் ரஹானே

கடைசி வரை போராட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினோம்: ரஹானே

Published On 2021-01-11 16:27 IST   |   Update On 2021-01-11 16:27:00 IST
வெற்றியை பற்றி நினைக்காமல் எதுவாக இருந்தாலும் கடைசி வரை போராட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினோம் என ரஹானே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்தியா இந்த பேட்டியில் தோல்வியடையும் என நினைத்தனர். ஆனால் வீரர்கள் பலர் காயம் அடைந்த நிலையிலும் கடைசி வரை போராடி போட்டியை டிரா பெறச் செய்தனர்.

போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் ரஹானே கூறுகையில் ‘‘எங்களது ஆளுமையை வெளிப்படுத்தி கடைசி வரை போராட வேண்டும் என்று போட்டி தொடங்குவதற்கு முன் பேசிக்கொண்டோம். நாங்கள் போட்டியின் முடிவு குறித்து யோசிக்கவில்லை.

இன்றைக்கு போராடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் என்ற நிலையில், 338 ரன்னில் ஆல்அவுட் ஆக்கியது சிறப்பானது.

நாங்கள் இன்னும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. ஆனால் அஸ்வின் மற்றும் விஹாரியை சிறப்பாக குறிப்பிட்டாகனும். அவர்கள் கடைசி வரை வெளிப்படுத்திய ஆளுமை, பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. ரிஷப் பண்ட்-ஐ பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் ஒரு யுக்தியை உருவாக்கினோம். ஆனால், எல்லாமே திட்டத்தை வெளிப்படுத்திய வகையில் அமைந்தது’’ என்றார்.

Similar News