செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி

2021-ல் பாகிஸ்தான் 10 இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது

Published On 2020-12-31 17:43 GMT   |   Update On 2020-12-31 17:43 GMT
2021-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக பிசிபி தலைவர் மானி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் தொடர்கள் பல ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் (2021) தொடர்ச்சியாக ஒவ்வொரு அணிகளும் விளையாட இருக்கின்றன.

அந்த வகையில் பாகிஸ்தான் அடுத்த வருடம் 10 இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் விளையாட இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி தெரிவித்துள்ளார்.

இதில் 9 டெஸ்ட், 20 ஒருநாள் மற்றும் 39 டி20 போட்டிகள் அடங்கும். வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டிக்கு பஞ்சமிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை இதில் அடங்காது. நியூசிலாந்த அணி உலக கோப்பைக்கு முன் பாகிஸ்தான் செல்கிறது. அதன்பின் இங்கிலாந்து இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
Tags:    

Similar News