செய்திகள்
ரிக்கி பாண்டிங்

இந்தியாவுக்கு எதிராக தோல்வி- ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மீது ரிக்கி பாண்டிங் பாய்ச்சல்

Published On 2020-12-31 12:47 IST   |   Update On 2020-12-31 12:47:00 IST
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததால் பேட்ஸ்மேன் மீது ரிக்கி பாண்டிங் பாய்ந்துள்ளார்.

சிட்னி:

மெல்போர்னில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னும், 2-வது இன்னிங்சில் 200 ரன்னும் எடுத்தது.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய வீரர்கள் திணறியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாய்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான கடந்த 2 டெஸ்ட் போட்டியில் எத்தனை புல்-ஷாட்டுகள் விளையாடப்பட்டுள்ளன என்பதை என்னால் ஒரு கையால் எண்ண முடியும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட சுப்மன்கில் மற்றும் ரகானே ஆகியோர் அதிகமான புல்-ஷாட்டுகளை விளையாடினார்கள் என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News