செய்திகள்
ஐசிசி ஒருநாள் அணி

ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் எம்எஸ் டோனி கேப்டன்: வங்காளதேச வீரருக்கும் இடம்

Published On 2020-12-27 16:08 IST   |   Update On 2020-12-27 16:08:00 IST
ஐசிசி அறிவித்துள்ள ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் டோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். வங்காளதேசத்தின் ஷாகிப் அல்-ஹசனுக்கும் இடம் கிடைத்துள்ளது.
ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை கொண்டு கனவு ஒருநாள் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது.

டி20-யை போன்று ஒருநாள் அணிக்கும் எம்எஸ் டோனியை கேப்டனாக அறிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுணடர் ஷாகிப் அல்-ஹசனும் இடம் பிடித்துள்ளார்.

ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கனவு அணி:-

1. ரோகித் சர்மா,  2. டேவிட் வார்னர்,  3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷாகிப் அல் ஹசன்,  6. எம்எஸ் டோனி,  7. பென் ஸ்டோக்ஸ், 8. மிட்செல் ஸ்டார்க், 9. டிரென்ட் போல்ட், 10. இம்ரான் தஹிர், 11. லசித் மலிங்கா.

Similar News