செய்திகள்
ஐசிசி-யின் டெஸ்ட் அணியில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து வீரர்கள்: இவருக்கு மட்டும் இடமில்லை
ஐசிசி-யின் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்தின் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. ஐசிசி-யின் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.
தேர்வு செய்வதற்கான கால வரையறைக்குள் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அதிகமான சதங்கள் அடித்துள்ளார். என்றாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:
1. அலஸ்டைர் குக், 2. டேவிட் வார்னர், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் கோலி, 5. ஸ்டீவ் ஸ்மித், 6. குமார் சங்ககரா, 7. பென் ஸ்டோக்ஸ், 8. அஸ்வின், 9. டேல் ஸ்டெயின், 10, ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.