செய்திகள்
முகமது சிராஜ்

இந்திய அணிக்காக டெஸ்டில் ஆடியது வாழ்வில் மிகப்பெரிய சாதனை - முகமது சிராஜ்

Published On 2020-12-27 09:39 GMT   |   Update On 2020-12-27 09:39 GMT
இந்திய அணிக்காக டெஸ்டில் விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீரர் முகமது சிராஜ் அறிமுகமானார். டெஸ்டில் அறிமுகமான 298-வது இந்திய வீரர் ஆவார்.அவர் 2 முக்கிய விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-

இந்திய அணிக்காக டெஸ்டில் விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன். கேப்டன் ரகானே, பும்ரா ஆகியோருடன் பேசிய பிறகு எனக்கு நம்பிக்கை கிடைத்தது.

‘இன்ஸ்விங்’ பந்து வீசும் திறமை எனக்கு இயல்பாகவே உள்ளது. எப்போதுமே நான் விக்கெட்டுக்கு மிக அருகில் வீசி பந்தை சுவிங் செய்ய முயற்சிக்கிறேன். அவுட் ஸ்விங்கும் என்னால் நன்றாக வீச முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகமது சிராஜ் தனது இன்ஸ்விங் பந்து மூலம் லபுசேன், கேமரூன்கிரீன் ஆகியோரை அவுட் செய்தார்.

Tags:    

Similar News