செய்திகள்
ரோகித் சர்மா - டோனி - விராட் கோலி - அஸ்வின்

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? ஐசிசி விருதுகள் நாளை அறிவிப்பு - இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு

Published On 2020-12-27 07:27 GMT   |   Update On 2020-12-27 08:50 GMT
கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து ஐசிசி விருதுகள் நாளை அறிவிக்கபட உள்ள நிலையில் இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
துபாய்:

2020-ம் ஆண்டு முடிந்து 2021-ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இதையொட்டி கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதுகள் வழங்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விருதுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி தொடங்குகிறது.

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சோபர்ஸ் விருது வழங்கப்படும். முன்னாள் வீரர்களை கொண்ட குழு, பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனத்தினர் ஆகியோர் சிறந்த வீரரை தேர்வு செய்கிறார்கள். 

அவர்களது பங்களிப்பு 90 சதவீதம் இருக்கும்.

மீதியுள்ள 10 சதவீதம் ரசிகர்களின் பங்களிப்பாக இருக்கும். அவர்கள் சிறந்த வீரரை தனது வாக்களிப்பின் மூலம் முடிவு செய்வார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியர்வர்கள் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்படுவர்.





கடந்த 10 ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரருக்கான தேர்வு பட்டியலில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, டிவில்லியர்ஸ், மலிங்கா (இலங்கை), ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), சங்ககரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

20 ஓவர் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஆரோன்பிஞ்ச் (ஆஸ்திரேலியா, கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரஷீத்கான் (ஆப்கானிஸ் தான்), இம்ரான் தாகிர் (தென் ஆப்பிரிக்கா), மலிங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News