செய்திகள்
இலங்கை வீரர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் நாளில் 340 ரன்கள் குவித்த இலங்கை

Published On 2020-12-26 22:44 IST   |   Update On 2020-12-26 22:44:00 IST
செஞ்சூரியனில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் மூன்று வீரர்களான கருணரத்னே (22), குசால் பெரேரா (16), குசால் மெண்டிஸ் (12) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த தினேஷ் சண்டிமல் (85), தனஞ்ஜெயா டி சில்வா (79) சிறப்பாக விளையாடி ரன்கள் விளாசினர். விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா 49 ரன்கள் அடித்தார்.

இந்த மூன்று பேரின் சிறப்பான ஆட்டத்தாலும், மற்ற வீரர்கள் ஓரளவிற்கு தங்களது பங்களிப்பை கொடுத்ததாலும் இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் 85 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வியான் முல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Similar News