செய்திகள்
விராட் கோலி- ரஹானே ரன்அவுட்

அடிலெய்டு திருப்புமுனை ரன் அவுட்டுக்காக விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டேன்: ரஹானே

Published On 2020-12-25 17:35 GMT   |   Update On 2020-12-25 17:35 GMT
போட்டியின் முடிவை ஒட்டுமொத்தமாக மாற்ற காரணமாக அமைந்த ரன்அவுட்டுக்காக விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டதாக ரஹானே தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவ காரணம் கோலியின் ரன் அவுட்டும் முக்கிய காரணம். முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலையில் இருந்த இந்திய அணி விரட் கோலியின் ரன்அவுட்டால் திடீரென தடுமாறியது.  ஆட்டத்தின் திருப்பு முனை என்றும் அதை சொல்லலாம்.

நாதன் லயன் வீசிய 77-வது ஓவரின் கடைசி பந்தில் ரஹானே சிங்கிள் எடுக்க முயன்று பிறகு பின் வாங்கியதால் விராட் கோலி ரன் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதற்காக கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் ரஹானே. ‘‘அந்த நாள் ஆட்டத்திற்கு பிறகு நான் கோலியிடம் சென்று நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தேன். அவர் பரவாயில்லை விடுங்கள் என்றார். எங்கள் இருவருக்குமே ஆட்டத்தின் அந்த சூழல் தெரியும். நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். இருப்பினும் இது கிரிக்கெட் விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று. அது மிகவும் கடினமான தருணம்’’ என்றார். 
Tags:    

Similar News