செய்திகள்
விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில் பேட் கம்மின்ஸ்

அடிலெய்டு டெஸ்ட்- 244 ரன்களில் இந்தியாவை சுருட்டியது ஆஸி.

Published On 2020-12-18 10:27 IST   |   Update On 2020-12-18 10:27:00 IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்கள் சேர்த்தது.
அடிலெய்டு:

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது. பகல்-இரவு போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகள் இழந்தது. அதன்பின்னர் 3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. புஜாரா 160 பந்தில் 43 ரன்களும், விராட் கோலி 180 பந்துகளில் 74 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்திருந்தது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, 11 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளும் சரிந்தன. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர்  துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

Similar News