செய்திகள்
ரகானே

பயிற்சி ஆட்டம்: பிரித்வி ஷா, ஷுப்மான் கில், சகா டக்அவுட்- ரகானே அசத்தல் சதம்

Published On 2020-12-06 15:45 IST   |   Update On 2020-12-06 15:45:00 IST
சிட்னியில் நடைபெற்று வரும் 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 237 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

அதன்படி பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய அணிக்கு ரகானே கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார். டாஸ் வென்ற ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, ஷுப்மான் கில் ஆகியோர் ரன் ஏதும் அடிக்காமல் டக்அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த புஜாரா தாக்குப்பிடித்து விளையாட ஹனுமா விஹாரி 15 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.


4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. புஜாரா 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுபுறம் விளையாடிய ரகானே சதம் அடித்தார். விக்கெட் கீப்பர் சகா டக்அவுட் ஆனார். குல்தீப் யாதவ் 15 ரன்களும், உமேஷ் யாதவ் 24 ரன்களும் அடித்தனர்.

ரகானே ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் அடிக்க இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா ஏ அணியில் ஜேம்ஸ் பேட்டின்சன் 3 விக்கெட்டும், டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News