செய்திகள்
சேத்தன் சர்மா

தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் விண்ணப்பம்

Published On 2020-11-15 14:42 GMT   |   Update On 2020-11-15 14:42 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஏற்கனவே சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் ஆகியோர் முறையே தெற்கு மற்றும் மத்திய மண்டலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் அஜித் அகர்கரும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிகிறது. அவர் 231 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருடன் பலர் தலைமை பயிற்சியாளர் சுனில் ஜோஷியுடன் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளதால், தலைமை பதவிக்கு ஆபத்து ஏற்படலாம்.

லோதா பரிந்துரையைின்படி அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சுனில் ஜோஷி 15 டெஸ்ட், 69 ஒருநாள் என 84 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சேத்தன் சர்மா விண்ணப்பம் செய்துள்ளதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து சேத்தன் சர்மா கூறுகையில் ‘‘ஆமாம், நான் தேர்வுக்குழுவிற்கு விண்ணப்பம் செய்துள்ளேன். தேர்வுக்குழுவில் வழக்கமான உறுப்பினராக இருப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய இலக்கு இந்திய அணிக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான். நான் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலிப் வெங்சர்க்கார் ஆகியோருடன் இணைந்து விளையாடியுள்ளேன்’’ என்றார்.
Tags:    

Similar News