செய்திகள்
டி நடராஜன்

முதன்முறையாக டீம் இந்தியா வலைப்பயிற்சியில் பந்து வீசிய நடராஜன்

Published On 2020-11-15 19:12 IST   |   Update On 2020-11-15 19:12:00 IST
ஆஸ்திரேலியா தொடருக்கான டி20 அணியில் இடம் பிடித்துள்ள டி நடராஜன், இன்று முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார்.
ஐபிஎல் 13-வது சீசன் கடந்த 10-ந்தேதி முடிவடைந்தது. இந்தத் தொடரில் மிகவும் உற்று கவனிக்கப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜனும் ஒருவர். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர்பெற்ற நடராஜன், இந்த சீசனில் டெத் ஓவர்களில் அசத்தினார். துல்லியமான யார்க்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

எலிமினேட்டர் சுற்றில் டி வில்லியர்ஸை துல்லியமான யார்க்கர்களால் வீழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இதனால் டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய டி20 அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் நேற்று பயிற்சியை ஆரம்பித்தனர். இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Similar News