செய்திகள்
கோப்புப்படம்

இந்திய தடகள சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் 31-ந் தேதி நடக்கிறது

Published On 2020-10-18 03:47 IST   |   Update On 2020-10-18 03:47:00 IST
இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்துள்ள குர்கயானில் வருகிற 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது.
புதுடெல்லி:

இந்திய தடகள சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மே மாதம் ஆன்லைனில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த தேர்தலை தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்துள்ள குர்கயானில் வருகிற 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் முதல் நாளில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் 21-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் அடில் சமரிவாலா 3-வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலாளர் சி.கே.வல்சனின் பதவி காலம் முடிவடைவதால் புதிய செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Similar News