செய்திகள்
லீவிஸ் ஹாமில்டன்

பார்முலா1 கார்பந்தயம் : ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார், ஹாமில்டன்

Published On 2020-10-11 20:05 GMT   |   Update On 2020-10-11 20:05 GMT
பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்.
நுர்பர்க்:

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்று போட்டி இபெல் கிராண்ட்பிரி என்ற பெயரில் ஜெர்மனியில் நேற்று நடந்தது. இதில் 308.617 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 35 நிமிடம் 49.641 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். பார்முலா1 கார்பந்தய வரலாற்றில் இது அவரது 91-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்த போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் (91 வெற்றி) சாதனையை சமன் செய்தார்.

நடப்பு தொடரில் ஹாமில்டன் 230 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 161 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News