செய்திகள்
துபாய் மைதானத்தில் முதல் 10 ஓவரில் மிகவும் குறைவான ஸ்கோரை பதிவு செய்த சிஎஸ்கே
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் சிஎஸ்கே துபாய் மைதானத்தில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 164 ரன்கள் அடித்தது. பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வேகப்பந்து வீச்சில் சென்னை அணி தொடகத்திலேயே விக்கெட்டை இழந்தது. வாட்சன் 1 ரன்னிலும், அம்பதி ராயுடு 8 ரன்னிலும், டு பிளிஸ்சிஸ் 22 ரன்னிலும், கேதர் ஜாதவ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் முதல் 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களே அடித்தது. இதன் மூலம் துபாய் மைதானத்தில் முதல் 10 ஓவரில் குறைவான ரன்களை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் டெல்லிக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்ததது. தற்போது அதை மிஞ்சியுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.