செய்திகள்
ராகுல் டெவாட்டியா, காட்ரெல்

வலைப்பயிற்சியில் நாங்கள் பார்த்ததை டெவாட்டியா காட்ரெலுக்கு எதிராக செய்தார்: ஸ்மித்

Published On 2020-09-28 10:14 GMT   |   Update On 2020-09-28 11:11 GMT
கடைசி 8 பந்தில் 6 சிக்ஸ் அடித்த ராகுல் டெவாட்டியாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெவாட்டியா குறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘வலைப் பயிற்சியின்போது ராகுல் டெவாட்டியாவிடம் என்னதை பார்த்தோமோ, அதை காட்ரெலுக்கு எதிராக செய்தார். அவருக்கு ஒரு பந்து சரியாக பேட்டில் பட்டுவிட்டால், அதன்பின் மடைதிறந்த வெள்ளம் போன்று விளையாடுவார் என ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். அவர் இதயத்தை காட்டிவிட்டார். டைம்அவுட் இடைவெளியின்போது அவர் என்னிடம், இன்னும் நமக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

மைதானத்தின் எல்லா பக்கமும் சஞ்சு சாம்சனின் அடித்த பந்து சென்றது. ஒவ்வொருவர் மீதும் நெருக்கடியை செலுத்துபவர். நாங்கள் மிகப்பெரிய மைதானத்திற்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஷாட்ஸ் எந்த மைதானத்திலும் சிக்சராகத்தான் இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News