செய்திகள்
செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

Published On 2020-09-09 21:54 GMT   |   Update On 2020-09-09 21:54 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒன்றைய பிரிவில் செரீனா வில்லியம்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 
காலிறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பல்கேரியாவின் டிஸ்விடனா பிரொன்கொவாவை எதிர்கொண்டார்.

போட்டியின் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் டிஸ்விடனா கைப்பற்றினார். இதையடுத்து ஆக்ரோஷமாக ஆடிய செரீனா போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி செட்களை 6-3, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதன் மூலம் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் டிஸ்விடனாவை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒன்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுக்குள் செரீனா வில்லியம்ஸ் நுழைந்தார்.

Tags:    

Similar News