செய்திகள்
சோயிப் அக்தர்

சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகர் தொடர்ந்தார்

Published On 2020-04-29 16:21 GMT   |   Update On 2020-04-29 16:21 GMT
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். இவர் ஓய்வு பெற்ற காலத்தில் இருந்து தற்போது வரை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் நல்லுணர்வுடன் இருந்தது கிடையாது.

தனியாக ‘யூ டியூப்’ சேனல் நடத்தி வருகிறார். அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு குறித்து அடிக்க விமர்சனம் செய்து வருகிறார்.

பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமர்சனம் செய்த அக்தர், சட்டத்துறையில் உள்ளவர்கள் குறித்து மோசமாக பேசியதாக தெரிகிறது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் ரிஸ்வி தனிப்பட்ட முறையில் சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், எஃப்.ஐ,ஏ. சைபர் கிரைம் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்.

சட்ட சகோதரத்துவம் பற்றி பேசும்போது அக்தர் கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும், அக்தரின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.
Tags:    

Similar News