செய்திகள்
கவாஸ்கர்

இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற சாத்தியமில்லை: கவாஸ்கர் கருத்து

Published On 2020-04-15 05:03 GMT   |   Update On 2020-04-15 05:03 GMT
கொரோனா நிவாரண நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற சாத்தியமில்லை என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை:

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்தலாம் என்றும் அதில் கிடைக்கும் வருவாயை இரு நாடுகளும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் சோயிப் அக்தர் யோசனை தெரிவித்து இருந்தார். இது சாத்தியமில்லாத காரியம் என்றும் நலநிதி திரட்ட வேண்டிய நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பதில் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுவதை காட்டிலும், லாகூரில் பனிப்பொழிவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளும் நேரடியாக மோதும். தற்போது இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுவது என்பது சாத்தியமில்லாத விஷயமாகும்‘ என்றார். 
Tags:    

Similar News