செய்திகள்
ஹர்திக் பாண்ட்யா

37 பந்தில் சதம் விளாசிய ஹர்திக் பாண்ட்யா: உடற்தகுதியுடன் இருப்பதாக தேர்வுக்குழுவுக்கு சூசக தகவல்

Published On 2020-03-04 09:30 GMT   |   Update On 2020-03-04 09:30 GMT
காயத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மாதங்கள் கழித்து கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா 37 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் சுமார் ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.

இந்நிலையில் டாக்டர் டி.ஒய். பாட்டீல் டி20  கோப்பைக்கான தொடரில் களம் இறங்கினார். ஹர்திக் பாண்ட்யா ரிலையன்ஸ்-1 அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று ரிலையன்ஸ்-1 அணி சிஏஜி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில்  ஹர்திக் பாண்ட்யா 37 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 39 பந்தில் 105 ரன்கள் அடிக்க ரிலையன்ஸ்-1 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவிததது. 105 ரன்னில் 10 சிக்ஸ் மற்றும் எட்டு பவுண்டரிகள் அடங்கும்.

இந்த அதிரடி மூலம் உடற்தகுதி பெற்று மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்ப தயாராக இருக்கிறேன் என்பதை தேர்வு குழுவுக்கு சூசகமாக தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹர்திக் பாண்ட்யா உள்ளார்.
Tags:    

Similar News